கரூர் அரசு பள்ளியில் குடற் புழு நீக்க மாத்திரையை சாப்பிட்ட பத்து மாணவர்களுக்கு ஒவ்வாமை காரணமாக உடல் நல கோளாறு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் குடல் புழு நீக்கம் முகாம் நடைபெற்று வருகிறது. இதன் படி, ராயனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு,
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. மாத்திரை சாப்பிட்ட மாணவர்களில் 10 பேருக்கு, ஒவ்வாமை காரணமாக, வாந்தி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.