தற்போதைய செய்திகள்

ஆன்லைன் App-களில் அசத்தல் அம்சம்.. ஒரே கிளிக்கில் 10 சதவீதம் பணம் மிச்சம்.. இனி எல்லாமே ஈஸி தான்..!

தந்தி டிவி
• இந்திய தேசிய பேமென்ட்ஸ் நிறுவனம் 2016ல் உருவாக்கிய யு.பி.ஐ மென்பொருளை அடிப்படையாக கொண்டு, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பல்வேறு பணப் பரிவர்த்தனை செயலிகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. • இதே போல பே நவ் என்ற பணப்பரிவர்த்தனை செயலி சிங்கப்பூரில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை 2017ல் சிங்கப்பூர் வங்கிகளின் குழுமம் உருவாக்கியது. • யு.பி.ஐ மற்றும் பே நவ் செயலிகளை இணைக்கும் திட்டத்தை செவ்வாய் அன்று பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங், காணொலி மூலம் தொடங்கி வைத்தனர். • இதன் மூலம் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இதர நாட்டினர், இந்தியாவிற்கு செயலி மூலம் மிக எளிதாக பணம் அனுப்ப வகை செய்யப்பட்டுள்ளது. • அதே போல சிங்கப்பூரில் வசிப்பவர்களின் அலைபேசி எண்களின் அடிப்படையில், இந்தியாவில் இருந்து செயலி மூலம் உடனுக்குடன் பணம் அனுப்ப முடியும். • சிங்கப்பூரில் இருந்து செயலி மூலம் சிங்கப்பூர் டாலரில் இந்தியாவிற்கு பணம் அனுப்பினால், அதை பெறும் இந்திய வங்கிகள், அன்றைய சந்தை மதிப்பின் அடிப்படையில், இந்திய ரூபாயாக அதை மாற்றி, பெறுனரின் வங்கி கணக்கில் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. • இதே போல இந்திய ரூபாயில், யு.பி.ஐ செயலி மூலம் சிங்கப்பூரில் இருப்பவருக்கு அனுப்பப்படும் தொகையை, சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் வங்கி, சிங்கப்பூர் டாலராக • மாற்றி, பெறுநரின் கணக்கில் வரவு வைக்கும். • தற்போது சுமார் 6.5 லட்சம் இந்தியர்கள் சிங்கப்பூரில் வசிக்கும் நிலையில், அவர்களுக்கு இந்த சேவை பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. • தற்போது சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு ஆண்டுக்கு சுமார் 42,060 கோடி ரூபாய் அனுப்பப்படுகிறது. • செயலிகள் மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனை, இதற்கான செலவுகளை 10 சதவீதம் வரை குறைக்கும் என்று துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’

LPG | EB Subsidy Tamilnadu | சிலிண்டர் தட்டுப்பாட்டால் - `மானியம்’ அறிவித்து முதல்வர் அதிரடி

LPG Shortage | Canteen | சிலிண்டர் தட்டுப்பாடு - அண்ணா பல்கலை., சென்னை ஐஐடியில் அதிரடி முடிவு

Gas Shortage | சிலிண்டர்களை பதுக்கி வைத்த `பேராசை’ கேஸ் ஏஜென்சிக்கு நேர்ந்த கதி

Iran War | Crude Oil Price Hike | ஈரான் போரால் அடுத்த பேரிடி.. பல மடங்கு விலை உயர்ந்தது