தற்போதைய செய்திகள்

"பயங்கரவாத வழக்கில் PFI தலைவர்கள் தலைமறைவு" - என்.ஐ.ஏ. எடுத்த அதிரடி நடவடிக்கை

தந்தி டிவி

பயங்கரவாத வழக்கில் தலைமறைவாக உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப என்.ஐ.ஏ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் மற்றும் ரவூப் ஆகியோர் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது. அண்மையில் கேரளாவில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனையில் இவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும், கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு தலைமறைவாக உள்ள இருவரும் அழைப்பு விடுத்ததாக என்.ஐ.ஏ. விசாரணை குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அப்துல் சத்தார் மற்றும் ரவூப் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க என்ஐஏ நடவடிக்கை எடுத்து வருகிறது. இரண்டு பேருக்கும் எதிராக கைது வாரண்ட் கோரி கொச்சி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ விரைவில் மனு தாக்கல் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்