தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• காரைக்குடி அருகே அரசு மதுபானக்கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், படுகாயமடைந்த கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் அரசு டாஸ்மாக் ஒன்று செயல்பட்டு வருகிறது. • அங்கு கடந்த 3 ஆம் தேதி இரவு, கடையின் விற்பனை கணக்குகளை ஊழியர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. • அப்போது, கடைக்கு வந்த பள்ளத்தூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கடையினுள் பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இதில், கடையில் இருந்த பொருட்கள் மற்றும் 76 ஆயிரம் ரூபாய் பணம் தீயில் கருகி சேதமான நிலையில், கடை விற்பனையாளர் அர்ச்சுனன் 70 சதவீதம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். • இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அர்ச்சுனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. • இதனிடையே, இந்த விபத்தில் பெட்ரோல் குண்டு வீசிய ராஜேஷும் காயமடைந்த நிலையில், அவர் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்