தற்போதைய செய்திகள்

கை விரல்கள் அறுக்கப்பட்ட நிலையில் பெருமாள் சிலை... அதிர்ச்சியடைந்த பொது மக்கள்..!

தந்தி டிவி

திண்டிவனம் அருகே கோயிலில் உள்ள பஞ்சலோக பெருமாள் சிலையின் 2 கைவிரல்களை காணவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திண்டிவனத்தை அடுத்த சாரம் கிராமத்தில் பழமையான ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது.

பராமரிக்கப்படாத நிலையில் இருந்து வந்த அக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய ஊர் பிரமுகர்கள் முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் சாரம் பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவர் கோயிலின் சாவியை பெற்று பராமரிப்பு பணிகளை செய்து வந்ததாகவும், இதற்கு ஊர் பொது மக்கள் எதிர்ப்பு

தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கோயிலில் உள்ள பஞ்சலோக பெருமாள் சிலையின் வலது கையில் உள்ள கட்டை விரலும், இடது கையில் ஆட்காட்டி விரலும் அறுக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளதாகவும் இதற்கு தனசேகர்தான் காரணம் என்றும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்