தற்போதைய செய்திகள்

சென்னை மக்களே உஷார்...புழக்கத்தில் கள்ளநோட்டுக்கள் ...| Chennai | Fake Notes

தந்தி டிவி

கள்ளநோட்டு புழக்கம் குறித்து காவல்துறை மற்றும் ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணித்து வருகிறது. ராமநாதபுரத்தில் அண்மையில் 3 சிறார்கள் சேர்ந்து தனியார் போட்டோ ஸ்டூடியோவில், 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை போட்டோ எடுத்து அதனை பிரிண்ட் செய்து புழக்கத்தில் விட்டனர். இந்நிலையில், சென்னை தரமணியில், மிக கச்சிதமாக 100 ரூபாய் கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான ரூபாய் நோட்டில், வலது பக்கம் இருக்கும் வெள்ளை பக்கத்தில், வெளிச்சத்தில் காண்பித்தால் தெரியக்கூடிய காந்தி புகைப்படத்தை மட்டுமே, கள்ள நோட்டு கும்பலால் தயாரிக்க முடியாததால் அந்த படம் தெரியவில்லை. மேலும், நூறு ரூபாய் நோட்டில், நடுப்பக்கத்தில் மின்னக்கூடிய பகுதி, கள்ள நோட்டில் மின்னவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"