தற்போதைய செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் மத போதகர் கைது

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஓட்டப்பிடாரத்தை அடுத்த கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் வினோத் ஜோஸ்வா என்பவர் போதகராக இருந்து வருகின்றார். அவர், அதே பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு திருமணத்துக்கு முன்பிருந்தே பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணும், அவருடைய கணவரும் அளித்த புகாரின் பேரில், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார், வினோத் ஜோஸ்வாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், கர்ப்பிணிக்கு 14 வயதில் இருந்தே பாலியல் தொல்லை அளித்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்