தற்போதைய செய்திகள்

10, 12ம் வகுப்பில் பாஸ் ஆனால் போதும்...ரேஷன் கடையில் அரசு வேலை - எப்படி விண்ணப்பிப்பது?

தந்தி டிவி

இது தொடர்பான அறிக்கையில், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு நியாய விலைக் கடைகளுக்கான நான்காயிரம் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிபார்ப்புப் பணிகளுக்கு அதிக அளவில் அலுவலர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினரை பயன்படுத்திக் கொள்ள சம்மந்தப்பட்ட துறைகளின் மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விற்பனையாளர் பணியிடங்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் கட்டுநர் பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே