தற்போதைய செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய பரங்கிமலை படுகொலை... மாணவனின் தாயும் உயிரிழப்பு - ஒரு குடும்பமே பலியான சோகம்

தந்தி டிவி
• சென்னையில் கடந்த அக்டோபர் மாதம், ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் தாயார், உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • சென்னை ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த ராமலட்சுமி என்பவரின் மகள் சத்தியப்பிரியா கல்லூரியில் படித்து வந்தார். • இந்த நிலையில், ஆலந்தூர் பகுதியை சேர்ந்த, ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தயாளன் என்பவரது மகன் சதீஷ், சத்தியப்பிரியாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சத்யா கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரெயில் நிலையத்தில் காத்திருந்த போது, அங்கு வந்த சதீஷ், சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தார். • இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யாவின் தந்தை மாணிக்கம், அன்றைய தினமே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். • ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த சத்யாவின் தாய் ராமலட்சுமி, தற்போது உடல் நலக்குறைவினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். • காதல் விவகாரத்தில் குடும்பமே உயிரிழந்த சம்பவம், ஆலந்தூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்