தற்போதைய செய்திகள்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சிறுவர்கள் ஊர்வலம் | படகில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

தந்தி டிவி

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கு விதமாக, மீனவர்கள் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினர். குடும்பத்துடன் வந்த மீனவர்கள் படகில் குழந்தை இயேசு உருவ சிலையை வைத்தும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடியும் மகிழ்ந்தனர். மீனவர் சங்கங்கள் திருச்சபை பாதிரியார்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய நிகழ்ச்சியில், புயலின் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, கும்பகோணத்தில் சிறுவர்கள் ஏராளமானோர், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஊர்வலம் சென்றனர். தூய அலங்கார அன்னை பேராலயத்தில், குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கிறிஸ்துமல் விழா நடைபெற்றது. இதில், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து, மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் சென்றனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி