தற்போதைய செய்திகள்

"பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்" மத்திய அமைச்சரிடம் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை

தந்தி டிவி

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு விளையாட்டு துறை சார்பில் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இடம் தமிழ்நாடு நாடார் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அச்சங்கத்தின் தலைவர் முத்துரமேஷ் நாடார் தலைமையில், கன்னியாகுமரி எம்பிவிஜய் வசந்த் முன்னிலையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக்தாகூரை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில், விளையாட்டுத் துறையில், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்ந்ததற்கு சிவந்தி ஆதித்தனார் செய்த நற்பணிகள் குறித்து விளக்கப்பட்டது. நாட்டில் உடற்பயிற்சி மற்றும் கல்வி சேவையில் அவரது ஈடுபாடும், செயலாற்றலும் ஈடு இணையற்றவை என்று, சிவந்தி ஆதித்தனார், தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை இதற்காக அர்ப்பணித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் செய்த சாதனைகளை போற்றும் வகையில் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனகோரிக்கை வைக்கப்பட்டடுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்