தற்போதைய செய்திகள்

கத்தி முனையில் உயிர்..ஓனரை கட்டி வைத்து வீட்டில் கொள்ளை - விசாரணையில் வெளிவந்த உண்மை

தந்தி டிவி

சென்னையில் ஆடிட்டர் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்த வழக்கில், ஆறரை லட்ச ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருவபவர் ஆடிட்டர் தாணுமாலய பெருமாள். இவரது வீட்டில் கடந்த 21 ஆம் தேதி புகுந்த 4 முகமூடி கொள்ளையர்கள், தாணுமாலய பெருமாளை கட்டி வைத்து, ஏழரை லட்ச ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகைகளை கத்தி முனையில் மிரட்டி பறித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசாருக்கு, கொள்ளையில் ஈடுபட்டது தாணுமலாய பெருமாளின் முன்னாள் கார் ஓட்டுநர் உசேன் என்பது தெரியவந்தது. உசேன் மற்றும் அவரது நண்பர்களான விஜய், சோமசுந்தரம் ஆகிய மூவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள விஜயின் வங்கி கணக்கை முடக்கிய போலீசார், அதிலிருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுள்ளனர். தொடர்ந்து சோமசுந்தரம் வீட்டில் சோதனை நடத்தியபோது, வீட்டிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகைகளை போலீசார் மீட்ட நிலையில், தொடர்ந்து மூவரையும் தேடி வருகின்றனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்