தற்போதைய செய்திகள்

ஆப்ரேஷன் தாமரை..? புயலை கிளப்பும் பாஜக அமைச்சர் குறித்த வீடியோ

தந்தி டிவி

கர்நாடகாவில் மாநில வீட்டு வசதி அமைச்சராக இருக்கும் சோமண்ணா, வருணா, சாம்ராஜ்நகர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் சாம்ராஜ்நகர் தொகுதியில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் மல்லிகார்ஜுன சாமியை போட்டியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தேர்தல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறது. சோமண்ணா தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போட்டியிலிருந்து விலக 50 லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசினார் என மல்லிகார்ஜுன சாமி குற்றம் சாட்டியிருக்கிறார். சோமண்ணா வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான 24 ஆம் தேதி மல்லிகார்ஜுன சாமியை தொடர்பு கொண்டு பேசியது என குறிப்பிட்டு ஆடியோ ஒன்றும் கர்நாடகாவில் வேகமாக பரவி வருகிறது. காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் ஆடியோவில், பாஜக ஆட்சிக்கு வரும்போது கார் வழங்குவதாகவும், தேவையான அனைத்தையும் செய்வதாகவும் மல்லிகார்ஜுன சாமிக்கு பாஜக அமைச்சர் சோமண்ணா ஆசைவார்த்தை கூறுவது போல் உள்ளீடு இருக்கிறது. தேர்தலுக்கு மத்தியில் பரவும் இந்த வீடியோவால் கர்நாடக பிரசார களத்தில் பரபரப்பு தொற்றியிருக்கிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்