தற்போதைய செய்திகள்

அணுமின் நிலையத்தில் வட இந்தியர்கள் மட்டுமே.. "உள்ளூர் மக்களுக்கு பணி வழங்க வேண்டும்" - கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை

தந்தி டிவி

அணுமின் நிலையத்தில் வட இந்தியர்கள் மட்டுமே.. "உள்ளூர் மக்களுக்கு பணி வழங்க வேண்டும்" - கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வட மாநிலத்தவருக்கே பணி வழங்கப்படுவதாக புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் அரசு பள்ளிக்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளிக்கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது. இதனை கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் எஸ்.பி.செல்கே திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கடந்த ஆண்டில் வட இந்தியாவை சேர்ந்த இந்தி தெரிந்தவர்களுக்கே பணி வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் வரும் காலங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்