ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்தால் தான் ஏன் அது தொடர்பான விளம்பரங்களில் நடிக்கப் போகிறேன் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சரத்குமார், ஆன்லைன் ரம்மி, மது உள்ளிட்டவற்றை அரசு தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.