தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருப்பரங்குன்றம், செய்யூர் பகுதியை சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவர் வடமாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவருடன், சென்னை, ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் நுழைவாயிலில் விளம்பர பலகை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில், விளம்பர பலகையை அளப்பதற்காக சுவர் மீது ரவிக்குமார் ஏறியபோது, கையில் வைத்திருந்த இன்ச் டேப் அருகில் இருந்த டிரான்ஸ்பார்ம் மீது உரசி மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவிக்குமார் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், இன்ச் டேப்பின் மறுமுனையை பிடித்திருந்த காஜா மொய்தீன் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தலையில் காயமடைந்த வடமாநில தொழிலாளியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்