தற்போதைய செய்திகள்

நகைக்காக மூதாட்டி கொலை!.. யூடியூப் பார்த்து நடந்த கொடூரம் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

தந்தி டிவி

பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தில் தெய்வானையம்மாள் என்ற 75 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. தெய்வானையம்மாளுக்கு உதவி செய்வதற்கா அடிக்கடி சென்று வந்த சஞ்சய் என்பவர், தன்னுடைய பைக்குக்கு பணம் கட்ட 50 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டதால், யூடியூப் பார்த்து மூதாட்டியிடம் நகையை பறிக்க திட்டமிட்டது தெரிய வந்த‌து. பின்னர், அதே பகுதியை சேர்ந்த நண்பர் கவுதம் மற்றும் 16 வயது சிறுவனுடன் நகையை பறிக்க சென்றதும், மூதாட்டி சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த‌தும் அம்பலமானது. பின்னர், ஏழரை பவுன் நகையை எடுத்துக்கொண்டு தாய் ஈஸ்வரியிடம் சஞ்சய் தெரிவித்த‌தும், மூதாட்டி வீட்டுக்கு சென்ற ஈஸ்வரி, பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றதும் தெரிய வந்த‌து. இவை அனைத்தும் மூதாட்டியின் மருமகள் பானுமதிக்கு தெரிந்தும், உண்மையை மறைத்து உடந்தையாக இருந்த‌தால், 5 பேரையும் போலீசார் கைது செய்த‌னர். அவர்களிடம் இருந்து ஏழரை பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு

TVK Vijay Karur Stampede Case | CBI விசாரணை முடிந்தது - இனி விஜய்?

Election Commission | TN Election | DMK | தேர்தல் தேதி - திமுகவில் இருந்து வந்த முதல் REACTION