தற்போதைய செய்திகள்

"பழைய ஆட்டக்கார‌ர்கள் கைகோர்த்துள்ளனர்" எதிர்கட்சிகள் குறித்து பிரதமர் மோடி பேச்சு

தந்தி டிவி

காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் இருபுறமும் கூர் தீட்டப்பட்ட கத்திகள் போன்றவை என்றும், திரிபுரா மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்

திரிபுராவில் வரும் பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, தலாய் மாவட்டத்தில் உள்ள அம்பாசா பகுதியில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். திரிபுராவை நீண்ட காலமாக காங்கிரசும், சிபிஎம் கட்சியும் ஆட்சி செய்து மாநிலத்தை பின்னோக்கி தள்ளியதாக குற்றம் சாட்டிய அவர், பாஜக 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றதாக பெருமிதம் தெரிவித்தார். வன்முறையும், பிற்போக்குத்தனமும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் பழங்குடியினரின் உயர்வுக்காக பாஜக பணியாற்றி வருகிறது என்றார். மாநிலத்தில் ஆட்சி செய்த பழைய ஆட்டக்கார‌ர்கள் கைகோர்த்து இருப்பதாக தெரிவித்த பிரதமர், அவர்கள் கூர் தீட்டப்பட்ட கத்திகள் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் வாக்களிக்க வேண்டும் என்றும் கூறி வாக்கு சேகரித்தார். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்