தற்போதைய செய்திகள்

14 வீடுகளை ஜேசிபியால் தகர்த்த அதிகாரிகள்... மண்ணை வாரி வீசி சாபம் விட்ட மக்கள்

தந்தி டிவி

பவானி அடுத்துள்ள ஊமாரெட்டியூர் ஊராட்சி, சுந்தரம்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 14 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், காவல்துறையினர் உதவியுடன் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை இடிக்க முயன்றனர். அப்போது குடியிருப்புவாசிகளுக்கும், நெடுஞ்சாலைத் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீதிமன்ற கால அவகாசம் முடிவதற்குள் நெடுஞ்சாலைத் துறையினர் வீடுகளை அகற்றுவதாக குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டினர். மாற்று இடம் வழங்காமல் குடியிருப்புகளை இடிப்பதாகவும் புகார் கூறினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மண்ணைத் தூற்றி வீசினர்.பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஜேசிபி எந்திரம் கொண்டு நெடுஞ்சாலைத்துறையினர் குடியிருப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்