தற்போதைய செய்திகள்

லூப் லைன்..ஒடிசாவை போல் சென்னையிலும்..அதிர்ச்சியில் பதறிய அதிகாரிகள்

தந்தி டிவி

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் மின்கம்பிகள் பராமரிப்பு பணி மேற்கொண்ட ரயில் பொன்னேரி அருகே வந்து கொண்டிருந்தது. அங்கு லூப் லைனுக்கு மாறிய போது, ரயிலின் பின்புற சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. தகவல் அறிந்த ரயில்வே கோட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இயந்திரங்களின் உதவியுடன் மீண்டும் தண்டவாளத்தில் ரயிலை ஊழியர்கள் நிலை நிறுத்தினர். இதனால் ரயில் சேவையில் பெரிய பாதிப்பு இல்லை எனவும் சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் புறநகர் ரயில்கள் சற்று காலதாமதாக இயக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து ரயில்கள் தடம் புரளும் சம்பவங்களால் ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு