தற்போதைய செய்திகள்

"ரயில்வே ஸ்டேஷனில் தமிழ் தெரியாத அலுவலர்" - டிக்கெட் கொடுப்பதற்குள் கிளம்பிய ட்ரெயின்

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.இந்நிலையில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில், தமிழ் தெரிந்த அலுவலர் விடுப்பு எடுத்துள்ள நிலையில், தமிழ் தெரியாத அலுவலர் டிக்கெட் கொடுக்கும் பணிக்கு தாமதமாக வந்தார். அதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டதால், அங்கு காத்திருந்த 300-க்கும் மேற்பட்டோர், ரயில்வே போலீசில் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அனைத்து பயணிகளும் டிக்கெட் எடுக்காமல் நெல்லைக்கு ரயில் ஏறி சென்றுள்ளனர். பயணிகள் மற்றும் பக்தர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு தமிழ் தெரிந்த அலுவலர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு