தற்போதைய செய்திகள்

அறநிலையத் துறை இடத்தில் உள்ள வீடுகளுக்கு சீல் வைத்து கைது செய்த அதிகாரிகள்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.பெரியபாளையத்தை அடுத்த மதுரவாசல் கிராமத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 20 சென்ட் நிலத்தை 9 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்களை வீடுகளை காலி செய்யுமாறு கடந்த 2017-ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 5 ஆண்டுகளாகியும் வீடுகளை காலி செய்ய மறுத்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 9 வீடுகளுக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்