தற்போதைய செய்திகள்

கனகசபையில் ஏறிய அதிகாரிகள் - சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட தீட்சிதர்கள்

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறுவதற்கு ஒரு தரப்பினர் தயாரான நிலையில் அதனை எதிர்த்து மற்றொரு தரப்பினரும் கூடி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்களை கனக சபையில் ஏற்றும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். சார் ஆட்சியர் வருகைக்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகளும் பக்தர்களும் காத்திருந்த நிலையில் கனக சபையில் ஏறுவதற்காக காத்திருந்த பக்தர்கள் கனக சபையில் ஏற அனுமதிக்க வலியுறுத்தி திடீர் கோஷங்களை எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் ஓம் நமச்சிவாய என்ற கோஷம் எழுப்பினர். இதனால் கோயில் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த சூழலில் 6 பேர் கனகசபையின் பிரதான வழியே உள்ளே சென்றதால் பதற்றம் அதிகரித்தது. இதனால் தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கனக சபையில் ஏறிய ஆறு பேரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார், கனக சபையை சுற்றியுள்ள வளாகம் முழுவதும் பதற்றமான நிலையில் கனக சபையில் ஏறியது காவல்துறை பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து கனக சபையில் அதிகாரிகள் நுழைந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தீட்சிதர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி