தற்போதைய செய்திகள்

மாறுவேடத்தில் சென்ற சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள்.. கையும் களவுமாக சிக்கிய வழக்கறிஞர்

தந்தி டிவி

கர்நாடக மாநிலத்தில் இருந்து திருடப்பட்ட சாமி சிலையை, அதிகாரிகள் மாறு வேடத்தில் சென்று மீட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோயிலில் இருந்து பூசாரி ஒருவர் பாலாஜி சிலையை திருடி, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வழக்கறிஞர் பழனிச்சாமி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.

இதையறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பழனிச்சாமியின் உதவியாளர் நடராஜன் என்பவரிடம் மாறுவேடத்தில் பழகியுள்ளனர்.

அப்போது, அவர் எங்களிடம் பழங்கால சாமி சிலை ஒன்று இருப்பதாகவும், அதன் மதிப்பு 33 கோடி எனவும் கூறியதை அடுத்து மாறுவேடத்தில் இருந்த அதிகாரிகள் 15 கோடிக்கு வாங்க சம்மதித்துள்ளனர்.

இதை பழனிசாமியிடம் நடராஜன் தெரிவித்து அவரை சிலையுடன் அழைத்து வந்துள்ளார்.

அப்போது அவர்களை மடக்கி பிடித்த அதிகாரிகள் உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் சிலையை பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது என்றும், இதன் பிண்ணனியில் யார் உள்ளார்கள் எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்