தற்போதைய செய்திகள்

தூங்கும் போது பாம்பு கடித்து செவிலியர் துடிதுடித்து பலி - திருவள்ளூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

பொன்னேரி அருகே வீட்டில் தூங்கியபோது பாம்பு கடித்து செவிலியர் உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு பகுதியை சேர்ந்தவர் செவிலியர் பார்கவி. இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் பார்கவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்