தற்போதைய செய்திகள்

வடமாநில பெண் அடித்தே கொலை... 2வது கணவர் நிகழ்த்திய கொடூரம் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

தந்தி டிவி

செண்பகராமன் புதூரில் உள்ள செங்கல் சூளை ஒன்றில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, கொல்கத்தாவை சேர்ந்த தெபுராய் என்ற இளைஞருடன், 7 வயது குழந்தையுடன் வந்த வசந்தி பாரியா என்று பெண்ணும் வேலைக்கு சேர்ந்துள்ளனர். ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வந்த வசந்தி பாரியாவை, தெபுராய் அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார். மதுவிற்கு அடிமையான தெபுராய், குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த தெபுராய், வசந்தியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தெபுராயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு