உலகின் மிகப்பெரிய துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட் பணி நீக்க நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாகி வருகிறது...
அமெக்காவில் உள்ள அனைத்து அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடவுள்ளதாக மெக்டொனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் திங்கள் முதல் புதன் வரை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு ஊழியர்களுக்கு அந்நிறுவனம் கடந்த வாரம் மின்னஞ்சல் அனுப்பிய நிலையில், புதிதாக ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.