சென்னசந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னசந்திரம், உளியாலம், பைரசந்திரம் உட்பட 7 கிராமங்களில் 2,700 ஏக்கர் இனாம்தார் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு வரை இந்த நிலங்களில் வீடு கட்டியும், விவசாயம் செய்து வந்தவர்களுக்கு அரசின் இலவச மின்சாரம், கூட்டுறவுக்கடன் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் அவை நிறுத்தி வைக்கப்பட்டன. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து உளியலாம் கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.