தற்போதைய செய்திகள்

"சிலிண்டர் விலை ஏன் உயர்கிறது?"சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்ட பெண்கள் - பதில் சொன்ன நிர்மலா சீதாராமன்

தந்தி டிவி
• இந்தியாவில் சிலிண்டர் எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாதததால், சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். • காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்திற்கு பாஜகவினரை சந்திக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். • அப்போது, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சுவர் விளம்பரப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். • தொடர்ந்து அப்பகுதி மக்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தபோது, சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். • இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், சிலிண்டர் எரிவாயுவை இறக்குமதி செய்வதால், அதற்கேற்றார்போல் விலை நிர்ணயம் செய்ய வேண்டி இருப்பதாகவும், கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை என்றும் கூறினார். • மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டி உள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்