தற்போதைய செய்திகள்

'சோதனை சாவடிக்குள் ஒரு ரவுண்டு' - காவலர்களை பதறவிட்ட ஒற்றை காட்டு யானை!

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சோதனை சாவடியில் காவலர்களை சிறை வைத்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. • கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாத காலமாக ஆண் காட்டு யானை ஒன்று உலா வருகிறது. • இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். • குஞ்சப்பனை சோதனை சாவடியில் காவலர்கள் இரவு ரோந்து பணி மேற்கொண்டு இருந்தனர். • யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய அந்த ஒற்றை காட்டு யானை காவலர்கள் தங்கியுள்ள சோதனை சாவடி அருகே வந்தது. • இதனால் அச்சமடைந்த காவலர்கள் சில மணி நேரம் சோதனை சாவடி கட்டடத்திற்குள் முடங்கினர். • நீண்ட நேரத்திற்குப் பிறகு அந்த யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. • இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்