சென்னை கிண்டியில் உள்ள பார்க் ஹயாத் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலை ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தூதுவரும், நடிகருமான மாதவன் தெரிவித்தார். தென்னிந்தியாவில் தங்கள் நிறுவன நகைகள் நன்றாக விற்பனை ஆவதாக நிர்வாக இயக்குநர் ஜான் ஆலுகாஸ் தெரிவித்தார். உடனடி வளர்ச்சியை காட்டி மக்களை தன்பக்கம் இழுக்கவில்லை எனவும், தங்கள் நிலையான நீடித்த நம்பிக்கை, மற்றும் உழைப்பை வைத்து இந்நிறுவனம் முன்னேறி உள்ளதாக நடிகர் மாதவன் குறிப்பிட்டார்.