தற்போதைய செய்திகள்

அறநிலையத்துறை சார்பில் 249 புதிய அறிவிப்புகள் - ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருவண்ணாமலை.. கோவில்களுக்கு புதிய திட்டங்கள்

தந்தி டிவி

அதில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு, அக்னி தீர்த்த படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 50 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சுடுமண் சிற்பங்களை பாதுகாத்து சீரமைக்கும் பணி 6 திருக்கோயில்களில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்றும்

திருப்பைஞ்ஞீலி, பழையாறை, திண்டல், உள்ளிட்ட 15 கோயில்களில் 25 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ராஜகோபுரங்கள் கட்டப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் 22 கோயில்களில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் எனவும்

திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் சார்பாக ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் உள்ளிட்ட மூன்று பசுக்கள் காப்பகங்கள் 4 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்