தற்போதைய செய்திகள்

"சார், மேடம் இல்லை - இனி டீச்சர் தான்" - கேரள பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவு

தந்தி டிவி

கேரளத்தில் ஆசிரியர்களை சார், மேடம் என அழைக்கக்கூடாது என்றும் டீச்சர் என்றே அழைக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில கல்வி நிலையங்களில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலினப் பாகுபாடு காட்டப்படுகிறது என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் முறையிடப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார், உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர், அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனர்.

அதில், பள்ளி ஆசிரியர்களை, சார் என்றும் மேடம் என்றும் கூறுவதைவிட, பாலினப் பாகுபாடு இல்லாமல், டீச்சர் என அழைப்பதுதான் மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய உத்தரவை அனுப்புமாறு, பள்ளிக்கல்வித் துறைக்கு குழந்தைகள் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதுபற்றி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு பள்ளிக்கல்வித் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்