தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு கோவில்களின் தகவல்களை அறிய புதிய மொபைல் ஆப்

தந்தி டிவி

திருக்கோயில் மொபைல் ஆப் மூலம் முதற் கட்டமாக 50 கோயில்களின் சேவைகளையும் திருப்பணிகளையும் அறிந்து கொள்ளலாம் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இருக்கும் திருக்கோவில்களின் தகவல்களைப் பற்றி பக்தர்கள் எளிதாக அறிய அவர்களுக்கு உதவும் வகையில் திருக்கோயில் விவரம் பற்றிய முழு தகவல் உள்ளடக்கிய திருக்கோயில் என்ற செல்போன் செயலி தொடங்கப்பட்டது. 48 முது நிலை திருக்கோவில்களின் பிரசாதம் பக்தர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தபால் துறையுடன் இணைந்து அஞ்சலி வழி பிரசாதம் அனுப்பும் திட்டமும் தொடங்கப்பட்டது. அதனை

அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருக்கோயில் மொபைல் ஆப் மூலம் முதற் கட்டமாக 50 திருக்கோயில்களில் சேவைகளையும் திருப்பணிகளையும் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்