தற்போதைய செய்திகள்

"புதிய கல்விக்கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தந்தி டிவி

புதிய கல்விக்கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது என்பதற்காகவே எதிர்ப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் தும்கூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவது தேச விரோத செயல் என தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக போராடுவோம் என்றும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நிற்கும் சசி தரூரும், மல்லிகார்ஜூன கார்கேவும் திறமை மிக்கவர்கள் என கூறினார்.

இருவருமே காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக செயல்படுவார்கள் என கருதவில்லை என ராகுல் காந்தி தெரிவித்தார். புதிய கல்விக்கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது. நமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான பரவலாக்கப்பட்ட கல்வி முறையை விரும்புவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்