தற்போதைய செய்திகள்

விசாரணைக்கு அழைத்து சென்று பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார்

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்களின் பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், நீதி விசாரணை நடத்த சார் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. • அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்களில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்களின் பல்லை பிடுங்கி காவல் அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. • இதுதொடர்பாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் புகார்கள் வந்தன. • இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் தலைமையில் குழுவை நியமித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். • இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்