தற்போதைய செய்திகள்

செல்போனில் கேம்.. கண்டித்த பெற்றோர் - சிறுவன் எடுத்த விபரீத முடிவு

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணா நகரை சேர்ந்த சொரிமுத்து, செங்கல்சூளையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். • இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். • இரண்டு மகளுக்கும் திருமணமான நிலையில், மகன் வசந்தகுமார், 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்குச் செல்லாமல், செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததால் அதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். • இந்நிலையில், வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு சாப்பிட வந்த சொரிமுத்து, வசந்தகுமார் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு மீண்டும் எச்சரித்துள்ளார். • இதனால் ஆத்திரமடைந்த வசந்தகுமார், வீட்டின் அருகில் இருந்த அரளிச்செடியில் காய்களை பறித்து அரைத்து குடித்துள்ளான். • பின்னர் ஆபத்தான நிலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் வசந்தகுமார் உயிரிழந்தான். • இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்