தற்போதைய செய்திகள்

499 நகரங்களில் 18 லட்சம் பேர்.... நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

தந்தி டிவி

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும்18 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். இவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல நீட் தேர்வில் கடுமையான கெடுபிடிகள், பரிசோதனைகள் கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் முன்னதாக ஒரு மணி நேரத்துக்கு முன் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்