தற்போதைய செய்திகள்

"சர்வாதிகாரம் தலை தூக்கும் போது புரட்சி வெடிக்கும்" - விடுதலையான பின் நவ்ஜோத் சிங் சித்து பரபரப்பு பேட்டி

தந்தி டிவி
• சாலை தகராறு மரண வழக்கில் 10 மாதங்கள் சிறை தண்டனையை நிறைவு செய்த, நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். • 1988-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை தகராறு மரண வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. • இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு சித்துவுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்தது. • உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரியதால், ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. • தற்போது சிறை தண்டனை நிறைவடைந்த நிலையில், நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் எப்போதெல்லாம், சர்வாதிகாரம் தலை தூக்குகிறதோ அப்போது புரட்சி வெடிக்கும் என்றும், அந்த புரட்சியின் பெயர் ராகுல் காந்தி என, நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி