தற்போதைய செய்திகள்

சுங்கச்சாவடியை உருட்டுக் கட்டைகளால் அடித்து நொறுக்கிய நவ நிர்மான் சேனா தொண்டர்கள் - மகாராஷ்டிராவில் பரபரப்பு

தந்தி டிவி

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள சின்னார் சுங்கச்சாவடியை மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவின் மகனான அமித் தாக்கரே, சுங்கச்சாவடியில் சுமார் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த தொண்டர்கள் உருட்டுக் கட்டைகளால் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் காயம் அடைந்த நிலையில், சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்