தற்போதைய செய்திகள்

தேசிய அளவில் கெத்து காட்டிய தமிழக சிறுமி... மேளதாளத்துடன் வரவேற்ற ஆசிரியர்கள்

தந்தி டிவி

தேசிய அளவிலான செஸ் போட்டியில் 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், உடையார்பாளையத்தை சேர்ந்த சிறுமி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் 7 வயது சிறுமி சர்வாணிகா. இவர், அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய செஸ் போட்டியில், 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றதோடு, அந்த பிரிவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதனையடுத்து அவர் பயிலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பாக, சிறுமி சர்வாணிகாவுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் பங்கேற்ற இந்த வரவேற்பு விழாவில், சிறுமிக்கு மேளதாளங்களோடு வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்