தற்போதைய செய்திகள்

பாசமாக "பாசிமாலை" அணிவித்த நரிக்குறவ மக்கள் - உடனே இறையன்பு செய்த நெகிழ்ச்சி செயல்..!

தந்தி டிவி
• தாம்பரத்தில் நெடுஞ்சாலை துறை பணிகளை பார்வையிட வந்த தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு நரிக்குறவர்கள் பாசிமாலை அணிவித்து மகிழ்ச்சியடைந்தனர்... • மாடம்பாக்கத்தில் கிழக்கு புறவழி சாலைக்காக நரிக்குறவ இன மக்களின் குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடம் வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது... • அந்த பகுதிகளை ஆய்வு செய்ய வந்த இறையன்புவை சந்தித்த நரிக்குறவர்கள் தங்களுக்கு வீடு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்... • நிச்சயம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என இறையன்பு உறுதியளித்த நிலையில், நரிக்குறவர் பெண் ஒருவர் பாசி மாலை எடுத்து இறையன்புவுக்கு அணிவிக்க முயன்றார்... • அப்போது ஆட்சியர் ராகுல் நாத்திற்கு மாலை அணிவிக்குமாறும் அவர் தான் தகுதியானவர் என்றும் இறையன்பு தெரிவித்த நிலையில், ராகுல் நாத்திற்கும், இறையன்புவிற்கும் பாசிமாலை அணிவிக்கப்பட்டது. • அதைப் பெற்றுக் கொண்ட இறையன்பு, மாலை எவ்வளவு என வினவிய நிலையில், தங்களை சந்திக்க வந்ததற்காக மகிழ்ச்சியில் மாலை போட்டதாக நரிக்குறவர்கள் தெரிவித்தனர். • இருந்தபோதிலும் 200 ரூபாய் பணத்தை அவர்களுக்கு இறையன்பு கொடுத்ததால், நரிக்குறவர்கள் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்