தற்போதைய செய்திகள்

பள்ளி வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த பள்ளி காவலாளி.. வெளியான பகீர் தகவல் - நாமக்கல்லில் அதிர்ச்சி

தந்தி டிவி
• நாமக்கல் மாவட்டம், ஆர்.எஸ். பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் நடராஜ். • இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி வளாக பகுதியில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். • அவரது சடலத்தை உடற்கூராய்வு செய்ததில், அவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. • போலீஸ் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பிரபு ராம், மணிகண்டன், மாணிக்கம் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். • இதில், பள்ளி வளாகத்தில் மூவரும் இணைந்து மது அருந்தியதை கண்டித்ததால், காவலாளி நடராஜை கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரிய வந்தது. • இதையடுத்து, மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்