தற்போதைய செய்திகள்

லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறி... நகைகள், Gpay மூலம் ரூ.73,000 அபேஷ் - சிக்கிய சகோதரர்கள்

தந்தி டிவி
• நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் கோஷி, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். • இவர், பூதப்பாண்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, வடசேரி பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஆசிப் என்பவர், லிப்ட் கேட்டுள்ளார். • உடனே சந்தோஷ் கோஷியும் காரை நிறுத்தி ஆசிப்பை காரில் ஏற்றினார். • பின்னர், இறச்சகுளம் பகுதிக்கு கார் வந்ததும் ஆசிப் இறங்கினார். • அப்போது அங்கு காத்திருந்த ஆசிப்பின் நண்பர்கள் மாகின், சமீர், அவரது சகோதரர் நசீர் ஆகிய 3 பேரும் சேர்ந்து சந்தோஷ் கோஷியின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டே கால் சவரன் நகையை கத்தியை காட்டி மிரட்டி பறித்தனர். • மேலும், சந்தோஷ் கோஷியின் செல்போனில் இருந்து கூகுள்-பே மூலம் 73 ஆயிரம் ரூபாயையும் அபேஷ் செய்தனர். • இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சமீர் மற்றும் அவரது சகோதரர் நசீர் ஆகிய இருவரை கைது செய்தனர். • மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்