தற்போதைய செய்திகள்

ஜவுளி எடுக்க போன கேப்பில் நடந்த சம்பவம் - சிசிடிவியில் கிடைத்த காட்சிகள்

தந்தி டிவி

கன்னியாகுமர மாவட்டம் நாகர்கோவிலில், ஜவுளி கடையில் நிறுத்தப்பட்ட வாடிக்கையாளரின் காரை திருடிய 2 பேரை, சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் பென்சாம் என்பவர் தனது காரை நிறுத்திவிட்டு சென்றபோது காணாமல் போயுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 பேர் காரை திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து, அனைத்து காவல்நிலையங்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். வடசேரி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, திருடப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜா மற்றும் ராஜன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்