தற்போதைய செய்திகள்

வீட்டின் முன் நின்ற காரின் டயர்களை கழற்றி சென்ற மர்ம நபர்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், சொகுசு காரின் 4 டயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சீர்காழி காந்தி பூங்கா எதிரில் வசிக்கும் முத்துராமன் என்பவர், சொகுசு கார் ஒன்றை வாங்கி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், காரின் 4 டயர்களையும் திருடிச் சென்றனர். கார் டயர்கள் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த முத்துராமன், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, காரில் வந்து டயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்