மேற்கு வங்க மாநிலம் பகவான்பூர் பகுதியில் போலீசார் பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்ற பாஜக தொண்டர்கள் மீது முகமூடி அணிந்தமர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இத்தாக்குதல் சம்பவத்தில் பாஜக தொண்டர்கள் 7 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த குண்டர்களின் பங்கு உள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.