தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவி மர்ம மரணம்.. சக மாணவர்களிடம் விசாரணை - சிபிசிஐடி தகவல்

தந்தி டிவி

கோவில்பட்டியை அடுத்த சில்லங்குளம் பள்ளி மாணவி சந்தேக மரணம் தொடர்பாக, மாணவியின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த சிபிசைடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே சில்லாங்குளத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த வைத்தீஸ்வரி என்ற மாணவி கடந்த 20ஆம் தேதி கழிவறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்த நிலையில், சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், சக மாணவர்கள், ஊழியர்கள் என 45 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவியின் சொந்த ஊரான பரமக்குடியை அடுத்த எஸ். அண்டக்குடிக்கு சென்று, குடும்பத்தினர், உறவினர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி