தற்போதைய செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்தவர் கொலை - மாவட்ட எஸ்.பி போட்ட உத்தரவு

தந்தி டிவி

ஓசூரில் ஸ்ரீராம் சேனா நிர்வாகி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய, காவல் ஆய்வாளர் உட்பட இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

ஓசூர் அருகே உள்ள சொப்பட்டியில், ஸ்ரீராம் சேனா அமைப்பின் நிர்வாகி மோகன் பாபு என்பவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் நிர்வாகி திலக் உட்பட 7 பேரை மத்திகிரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கொலை வழக்கில் கைதான திலக், சில தினங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்தார். இவரை, அடையாளம் தெரியாத கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பழிக்கு பழி வாங்கும் நோக்கில், கொலை செய்யப்பட்ட மோகன்பாவின் தந்தை கூலிபடையை ஏவி திலக்கை கொலை செய்தது தெரியவந்தது.இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய மத்திகிரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சிற்றரசு ஆகிய இருவரை மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாகூர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்