தற்போதைய செய்திகள்

"நில அளவீடு செய்யச் சென்ற பெண் வி.ஏ.ஓ".. "மும்பையிலிருந்து வந்த கொலை மிரட்டல்" - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நில அளவீடு செய்யச் சென்ற பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. • அரும்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் அலுவலகம் அமைக்க, புறம்போக்கு இடங்களை அளவீடு செய்ய, திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. • இதன் அடிப்படையில், அரும்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ஜீவா மற்றும் நில அளவையர் ஏழுமலை ஆகியோர், நிலங்களை அளவீடு செய்தனர். • இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். • மேலும், ஜீவாவுக்கு மும்பையில் இருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. • விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், சக்கரையாஸ் ஷெட்டி என்பது தெரியவந்தது. • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்